மரண வயது வரை
அறிந்திருக்கவில்லை நான்
மரண பயம் என்னவென்று?
வட்டி கட்டாத ராமசமியின் வீட்டை
நான் எடுத்து கொண்டதில்
தற்கொலை செய்தியை செய்தித்தாளில்
சஞ்சலமின்றி படித்தேன்..!!
ஜிம்மியுடன் சென்ற வேலைக்கார
முனிசாமிமீது லாரி ஏறியதில்
வருத்தமில்லை எனக்கு!!.
காயமின்றி தப்பிய
ஐம்பதாயிரம் ரூபாய் அல்சேசனுக்கு
பால் சோறு ஊட்டியிருக்கிறேன் அன்று ..!!
ராகவனின் அப்பா இறந்ததற்கு
போகவில்லை நான்..
மறுநாள் அவன் அம்மாவும் இறந்த பொழுது
அவன் இனி எங்கு சாப்பிடுவான் என்று
மட்டும் நினைத்திருக்கிறேன்!!
என் கிணற்றிற்கு போட்டியாக
மாணிக்கம் தோண்டிய ஆழ்துளை
கிணற்றில் விழுந்து அவன் மகள்
இறந்தபொழுது சிற்றின்பம் எனக்கு..!
இந்திய வயது வரம்பை
எட்டாமலேயே நற்பதைந்தில்
மரண வயது எனக்கு!!
சர்க்கரையில் அழுகிப்போன என்
இரண்டாவது காலை எடுப்பதற்கு
நாளை தேதி குறித்திருக்கிறார் டாக்டர்.
மரண செய்தி வரும் உங்களுக்கு
யாரும் வராதீர்கள் !!!
Monday, March 23, 2009
Wednesday, March 18, 2009
த ரீடர் - விமர்சனம்
த லிட்டில் சில்ட்ரென் (2006)- சிறந்த நடிகை
எடெர்னல் சன்சைன் ஆப் த ஸ்பாட்லஸ் மைன்ட்(2004)-சிறந்த துணை நடிகை
ஐரிஸ் (2001) - சிறந்த துணை நடிகை
டைடானிக்(1997) - சிறந்த நடிகை
சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி(1995) - சிறந்த துணை நடிகை
ஆகிய படங்களில் தவறவிட்ட ஆஸ்கார்- ஐ, இந்த படத்தில் எட்டி பிடித்திருக்கிறார் கேட் வின்ஸ்லெட். இவரை தவிர , ரால்ப் பியான்ஸ் -ம் நடித்திருக்கிறார்.
ரால்ப் பியான்ஸ் - க்கு " த இங்கிலீஷ் பெசன்ட் "- படம் போல உயிரோட்டமான தளம் அமையவில்லை என்றாலும், இறுதி காட்சியில் , தனது மனைவியை , கேட் வின்ஸ்லெட்- இன் கல்லறைக்கு கூட்டி செல்லும் போது சிறிது கலக்கமாகதான் இருக்கிறது நமக்கு.
வழக்கறிஞர் - மைக்கல் பெர்கின் (ரால்ப் பியான்ஸ் )- இன் நிகழ் காலத்தை (1995) இறந்த காலத்துடன் (1958) இணைப்பதே கதை. 1958-இல் மைக்கல்(டேவிட் க்ரோஸ் )-க்கு தனது 15-ஆவது வயதில் ஹன்னாவுடன் (கேட்) சந்திப்பு நிகழ்கிறது.
இந்த படத்திற்கு கேட் வின்ஸ்லெட்-கு ஆஸ்கர் கிடைத்ததற்கு பதில் , "ரேவளுசனரி ரோடு" - க்கு கிடைத்து இருக்கலாம் (அதில் தனது கணவனின் (சாம் மென்டிஸ் )டைரேக்சனில் தப்பித்து விட்டார் பெண், தவிர அதற்கு கோல்டன் க்ளோப் கிடைத்து இருக்கிறது). விருதிற்க்காகவே பெண்ணை கஷ்ட படித்திருக்கிறார் டைரக்டர் ஸ்டீபன் டால்ட்ட்ரி.
கேட் வின்ஸ்லெட் இனிமேல் ஆவது இந்திய (டைடானிக் - அந்த ஒரு காட்சியை மன்னித்து விடலாம் )ரசிகர்களை காய படுத்தாமல் இருக்க வேண்டும். இனிமேல் ஆவது கண்ணியமான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும்.( இப்படத்தை இந்திய தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்ப்பது நல்லது )
இவ்வாறாக தொடரும் காதல் படலத்தில், மிக்கேலிற்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. ஹன்னாவிற்கு படிப்பறிவு இல்லை என்பது. தன் கையெழுத்தை கூட போட தெரியாதவர் என்பது. புத்தகங்களை ஹன்னாவிற்கு படித்து காட்டுகிறான் மிக்கேல்.
இருவருக்கும் இடையில் ஊடலும் கூடலும் அவ்வபோது நிகழ்கிறது. திடீரென்று ஒரு பொழுதில் காணாமல் போகிறார் ஹன்னா. 1960 - ல் , சட்ட மாணவரான மிக்கேலை அவர் ஆசிரியர்(புருனோ கன்ஸ் ) ஒரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார்.
அங்கு நிகழ்கிறது ஹன்னா-உடன் இரண்டாவது சந்திப்பு. வழக்கில் முதல் குற்றவாளியே ஹன்னாதான். வழக்கு இதுதான்- இரண்டாம் உலகப் போருக்கு பின்னான குற்றங்களுக்கான விசாரணைகள் ஜெர்மனியில் நடைபெற்ற காலகட்டம் அது. நாசி படைகள் யூத இன அழிப்பிற்கு உருவாக்கி வைத்திருந்த ஒரு பெண் விடுதிக்கு (சிறை என்றும் சொல்லலாம் ) காப்பாளராக இருக்கிறார் ஹன்னா. விடுதிக்கு உள்ளே தீ விபத்து ஏற்படுகிறது. அந்த விடுதிக்கு இருந்த ஒரே வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது. உயிர் சேதங்கள் ஏற்பட்டு விடுகிறது. சரியான நேரத்தில் வழி திறக்கப்பட்டிருந்தால், யூத பெண்கள் அனைவரையும் காப்பற்றிருக்கலாம்.
விபத்தில் தப்பித்த பெண்ணின் சாட்சியத்தில் விடுதி காப்பாளர்கள் அனைவரின் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. முதல் குற்றவாளியாக ஹன்னா.
யூத கனவை எரித்து கரியாக்கிய விடுதியின் சிதிலங்களை பர்வையிடுகிறான் மைக்கேல். ஹன்னாவின் மேல் நம்பிக்கை இருக்கிறது அவனுக்கு. விடுதிக்கு தலைமை காப்பாளர் ஹன்னா-தான் என்றும், அதற்கு சாட்சியாக , விபத்தை பற்றிய முரண்பட்டு தகல்வல்களுடன், தலைமை காப்பாளர் கையெழுத்திட்ட அறிக்கையை காட்டுகிறார் நீதிபதி.
அறிக்கை தன்னால் எழுதப்படவில்லை என வாதிடுகிறாள் ஹன்னா. ஆனால் மற்ற குற்றவாளிகள் ஹன்னாதான் தலைமை காப்பாளர் என்கின்றனர். கையெழுத்து ஒப்புமைக்காக தாளும் எழுதுகோலும் வைக்கப்படுகிறது ஹன்னா முன்னால். தான் எழுதப் படிக்கத் தெரியாதவள் என நீதிமன்றத்தில் பறைசாற்றுவது அவமானம் என நினைத்து, அறிக்கை தன்னால் எழுதப்பட்டதுதான் என ஒப்பு கொள்கிறாள். ஆயுள் கைதி ஆக்கப்படுகிறாள் ஹன்னா.
மிக்கேலுக்கு ஹன்னாவை சிறையில் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. காத்திருக்கிறாள் ஹன்னா. பார்க்காமலேயே திரும்பிவிடுகிறான் மிக்கேல். வேரொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான் மைக்கேல். வயதாகிறது ஹன்னவிற்கு. ஆயுள் தண்டனை முடிய ஓரிரு ஆண்டுகளே உள்ளன.
மைக்கேலின் அறையில் புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம் ஹன்னவின் நினைவு வருகிறது. புத்தகங்களை தானே வாசித்து, அதை ஒரு ஒலி பேழையில் பதிவு செய்து ஹன்னாவிற்கு அனுப்பி வைக்கிறான் மைக்கேல். மகிழ்ச்சி அடையும் ஹன்னா, அதற்குரிய புத்தகங்களை சிறை நூலகத்தில் எடுத்து வைத்து கொண்டு, மைக்கேலின் குரலுடன் ஒப்புமை செய்கிறாள். அவன் குறிப்பிடும் வார்த்தைகளை எண்ணிப் பார்த்து ஒவ்வொரு வார்த்தைகளையும் தெரிந்து கொள்கிறாள்.
கடிதத்தில் பதிலளிக்கும் அளவுக்கு அறிந்து கொள்கிறாள் ஹன்னா. நலம் விசாரித்து கடிதம் அனுப்புகிறாள் ஹன்னா. மைக்கேலிடமிருந்து பதில் கடிதம் மட்டும் வரவேயில்லை. ஆயில் தண்டனை முடியும் தருவாயில் தன்னை வந்து அழைத்து செல்லும்படி கடிதம் அனுப்புகிறாள் ஹன்னா.
அழைத்து செல்ல வரும் மைக்கேல் கூறும் வார்த்தைகள், ஹன்னாவிற்குள் புயலை கிளப்புகின்றன. பல வருட பிரிவிற்கு பிறகான ஏக்கம் ஹன்னாவின் கண்களில் தெரிகிறது ( அபாரமான நடிப்பு). அவன் தன்னோடு அவளை அழைத்து செல்ல முடியாது என்றும் வேறு இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாகவும் கூறுகிறான். கலங்குகிறாள் ஹன்னா. மைக்கேல் சென்றவுடன் தன் அறைக்கு வரும் ஹன்னா, தற்கொலை செய்து கொள்கிறாள்.
தன் மனைவி குழந்தையுடன் ஹன்னாவின் கல்லறைக்கு சென்று கதை சொல்ல தொடங்குவதுடன் படம் முடிகிறது.
இரண்டாம் பாதி நடிப்பு கேட் வின்ஷ்லடின் பண்பட்ட நடிப்பு. வாழ்த்துக்கள் கேட் .

Monday, March 2, 2009
இதயம் தின்றவள்...!!
உன் நினைவுகளுடனே என் பேருந்து பயணம்..
படி பற்ற தவறியது என் கால்
நிலை தடுமாறி ..
தலை சக்கரத்தில் சிக்கி
முதுகெலும்பு உடைந்து
மார்புகூடு நசுங்கி...
அதோ பார்..!!
துண்டித்து விழுந்து துடிக்கிறது இதயம்
உன் பெயருடன் முகவரி சொல்லி..
கதவு தட்டப்படும் திற..
அன்று நம்ப மறுத்தாய்!!
வந்து பார்!
என் இதயச் சுவரெங்கும் இடைவெளி இல்லாமல்
உன் பெயரை!!!.
படி பற்ற தவறியது என் கால்
நிலை தடுமாறி ..
தலை சக்கரத்தில் சிக்கி
முதுகெலும்பு உடைந்து
மார்புகூடு நசுங்கி...
அதோ பார்..!!
துண்டித்து விழுந்து துடிக்கிறது இதயம்
உன் பெயருடன் முகவரி சொல்லி..
கதவு தட்டப்படும் திற..
அன்று நம்ப மறுத்தாய்!!
வந்து பார்!
என் இதயச் சுவரெங்கும் இடைவெளி இல்லாமல்
உன் பெயரை!!!.
Subscribe to:
Comments (Atom)