மரண வயது வரை
அறிந்திருக்கவில்லை நான்
மரண பயம் என்னவென்று?
வட்டி கட்டாத ராமசமியின் வீட்டை
நான் எடுத்து கொண்டதில்
தற்கொலை செய்தியை செய்தித்தாளில்
சஞ்சலமின்றி படித்தேன்..!!
ஜிம்மியுடன் சென்ற வேலைக்கார
முனிசாமிமீது லாரி ஏறியதில்
வருத்தமில்லை எனக்கு!!.
காயமின்றி தப்பிய
ஐம்பதாயிரம் ரூபாய் அல்சேசனுக்கு
பால் சோறு ஊட்டியிருக்கிறேன் அன்று ..!!
ராகவனின் அப்பா இறந்ததற்கு
போகவில்லை நான்..
மறுநாள் அவன் அம்மாவும் இறந்த பொழுது
அவன் இனி எங்கு சாப்பிடுவான் என்று
மட்டும் நினைத்திருக்கிறேன்!!
என் கிணற்றிற்கு போட்டியாக
மாணிக்கம் தோண்டிய ஆழ்துளை
கிணற்றில் விழுந்து அவன் மகள்
இறந்தபொழுது சிற்றின்பம் எனக்கு..!
இந்திய வயது வரம்பை
எட்டாமலேயே நற்பதைந்தில்
மரண வயது எனக்கு!!
சர்க்கரையில் அழுகிப்போன என்
இரண்டாவது காலை எடுப்பதற்கு
நாளை தேதி குறித்திருக்கிறார் டாக்டர்.
மரண செய்தி வரும் உங்களுக்கு
யாரும் வராதீர்கள் !!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment