என் முழு நேர பிரயத்தனங்களில்
இசையவில்லை உன் மனம்
வலி கூடிப்போனது..!!
நண்பர்களுடனான
கதையாடல்களில்
விளையாட்டில் ஆர்வம் என்றாய்!
கன்னச் சதை தெறிக்க ஓடி
வாங்கிய கோப்பை நிரம்பிப் போனது...
நீ சிந்திய கண்ணீர்களால்!!!.
ஆங்கில அலைகளில் அமிழ்ந்து போன
நகராட்சிப் பள்ளி மாணவன் நான்!!
கல்லூரி முதலிறிதித் தேர்விலேயே
தோற்றுப் போய்...
சுவர் முட்டலில்
குருதி காட்டுகிறது நெற்றி...
சிரித்துக் கொண்டே இருந்தாய் நீ!!
என் வெற்றியில்தான் உன் அழுகையே??
புன்னகை காட்டும் போதெல்லாம்
தோற்றுப் போயிருப்பேன் நான்!!.
மறதி மறைத்து
திருமண அழைப்பிதழ் நீடிவிட்டுப்
போகிறாய்!!
மனதிற்கும் மூளைக்குமான
வெவ்வேறு திசை இயக்கங்களில்
குழம்பிப் போனவன் தெளிகிறேன்!!
என் தோல்வித் தருணங்களில் எல்லாம்
வெற்றி பெற்றவன் என் நண்பன்!!.
Monday, April 20, 2009
Thursday, April 2, 2009
இந்திய கைகள்..!!!
ரேகை எண்ணி
காலம் கணிக்க முடியாது!
தடமற்றவைகள்...
என் கைகள்!!
நேற்று பிறந்த குழந்தைகளை
தொட்டுவிடும் தூரத்தில் இருந்தும்
ஸ்பரிசித்ததில்லை
மென்தசையூடே பாயும்
குருதி தடுக்கும் கைகளை
பிரயோகிக்க மனம் கூடாமல்!!
பாரம்கொண்ட மூடை, சந்துசட்டி
ஓட்டுனர் வளையம், வெட்டரிவாள்
கடப்பாரை, மண்வெட்டி, மூக்கணாங்கயிறு
காலம் பார்க்காமல் வேகம் காட்டும்
கைகள்!!
பணவீக்கமோ? பொருளாதார மந்தமோ?
வளர்ச்சியோ? வீழ்ச்சியோ?
யாசகம் கேட்டதில்லை...!!
கைகளின் வேகம் மட்டுமே
கூடிப் போகும்!!
காலம் கணிக்காத கணிப்பொறி
துறை வெளியேற்றினாலும்
பொறியாளர் மகனின் குடும்பத்தை
காத்துக்கொள்ளும் என் கைகள்
இறக்கைக்குள் குஞ்சைக் காக்கும்
கோழி போல் அல்ல!!!
இராணுவ வீரனைக் காக்கும்
பதுங்கு குழியைப் போல...!!!
Subscribe to:
Comments (Atom)
