Tuesday, July 21, 2009

செய்னா நேவால் ...!

இரண்டெழுத்து
குழப்பங்களுக்கு நேற்றுதான்
பதிலளித்தியிருக்கிறாய்
செய்னாவும் சானியாவும்
வேறு வேறு என்று!!

மூச்சுவிட நேரமற்ற
ஆட்டத்தில் சீனாவின்
மூச்சை நிறுத்திருக்கிறாய்!!

சீன உடுருவலை
தடுக்க மட்டுமே முடிகிறது
இந்திய ராணுவத்தால்!
தடுத்து விரட்டியோடச்
செய்தது நீ மட்டுமே!!

பாட்மிண்டன்
மட்டையைத் தீட்டி
வாளாக்கு!!
கிரிக்கெட் மட்டையை
வெட்டித் தூளாக்கு!!

உன் வெற்றியை
கறுப்புப் பக்கங்களில்
பதிவு செய்து விட்டு
௨0-௨0க்கு வண்ணமிட்ட
ஊடகங்களை வெட்கித்
தலை குனியச் செய்!!

கோபி உன் திசை காட்டி!
உன் வரவேற்பறையை
அலங்கரிப்பவன்!!
குருச்சேத்திரத்தில்
தேரோட்டுபவன்!!
19 வயது முல்லைக்கு
தேர் கொடுத்தவன்!!

பல வெற்றிகள்
சில தோல்விகள்
உச்ச மேடை
தொட்டுவிடும் தூரம்தான்..!

கண்டுகொண்ட
பாதை உன்னிடம்தான்!
சலனமின்றி கடந்துவிடு
உச்சத்தை!!
காலம் பார்த்துக்
கொள்ளும் மிச்சத்தை!!

4 comments:

no said...

kakirra -dharma.....

no said...

திருமணம் ஆகி
கால் நூற்றாண்டுக்கு
மேல் கடந்து விட்டது;
இதுவரை சிறிய
சண்டையோ (அ) சச்சரவோ
எங்களுக்குள் வந்ததில்லை!!!
மனைவி பெயர்
"கனவு".

aasa said...

"Pesatha varthayai vida" "Parkatha kankalai vida" "Ninaithu kondirukum idhayathukku vali athigam"..

சங்கர் said...

nice..........